அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை இரவு 7 மணிக்கு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டி தொடங்குகிறது. இந்திய அணி ஏற்கனவே இரண்டு முறை டி20 உலகக்கோப்பையை வென்றுள்ள நிலையில், தற்போது மூன்றாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைக்கும் முனைப்பில் களமிறங்குகிறது. அதேசமயம், நியூசிலாந்து அணி தனது முதல் உலகக்கோப்பை கனவை நனவாக்கப் போராடவுள்ளது.
இந்த இறுதிப்போட்டியின் ‘கிளோசிங் செரிமனி’ (Closing Ceremony) எனப்படும் நிறைவு விழாவில் உலகப்புகழ் பெற்ற நட்சத்திரங்கள் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.
அகமதாபாத் மைதானத்தில் இந்திய அணிக்கு ஏற்கனவே சில கசப்பான அனுபவங்கள் இருந்தபோதிலும், நாளை 140 கோடி இந்தியர்களின் ஆதரவுடன் இந்திய அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த மெகா மோதலில் ஜெயிக்கப்போவது ‘மென் இன் ப்ளூ’ (Men in Blue) அணியா அல்லது நியூசிலாந்தா என்பது நாளை இரவு தெரிந்துவிடும்.