“எங்கிட்டயே உன் வேலையை காட்டுறியா?”.. அசால்ட்டாக திருட வந்தவரை அலறவிட்ட முதியவர்…வைரலாகும் திக் திக் வீடியோ..!!!
SeithiSolai Tamil March 08, 2026 01:48 AM

பேருந்து பயணங்களில் மக்கள் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சாட்சி. ஓடும் பேருந்தில் அமர்ந்திருந்த ஒரு முதியவரின் சட்டைப் பையிலிருந்த பணத்தைத் திருட, ஒரு இளைஞன் தனது பையை மறைப்பாக வைத்துக்கொண்டு கைவரிசை காட்டியுள்ளான்.

ஆனால், முதியவர் சாமர்த்தியமாக அவனது கையைப் பிடித்துவிட்டார். பிடிபட்டதும் தப்பிக்க வழி தெரியாத அந்தத் திருடன், திடீரென தனது வாய்க்குள் மறைத்து வைத்திருந்த பிளேடை வெளியே எடுத்து மிரட்டியுள்ளான்.

திருடர்கள் பொதுவாக துணி அல்லது பைகளை அறுக்க பிளேடைப் பயன்படுத்துவார்கள் என்பதால், அவன் வாயிலேயே அதை வைத்திருந்தது பயணிகளை அதிரவைத்துள்ளது. இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.