நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சினிமாவில் பனி நேரம் குறித்து பேசியுள்ளார். அதாவது மலையாளத் திரைத்துறையில் பெரும்பாலும் வேலை நேரம் 16 மணி நேரம் வரை நீடிக்கும். இப்போது, அதை பேசி 12 மணிநேரமாக மாற்றி இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது எங்களுக்கு இப்போது பெரிய விஷயம் என்றும், பல ஆண்டுகளாக அதிகாலை 06 மணிக்கு ஷூட்டிங்ட் தொடங்கி, இரவு 09.30 வரை படப்பிடிப்பு நீடிக்கும். ஞாயிறு விடுமுறையும் கிடையாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இது நடிகர்களை மட்டும் சார்ந்தது கிடையாது என்றும், பல தொழிலார்கள் இருக்கிறார்கள். ஆனாலும், சினிமாவில் பணி நேரத்தை எப்போதும் நிலையாக முடிவு செய்ய முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாள் படப்பிடிப்பு சரியாக நடக்க நூறு விஷயங்கள் சரியாக நடக்க வேண்டிய அவசியம் இருக்கும். இதை எல்லாம் மனதில் வைத்து கூட சொல்கிறேன், ஒவ்வொரு நபருக்கும் மரியாதையும் ஓய்வும் அவசியம் தேவை என்று தெரிவித்துள்ளார்.
இப்போது 08 மணிநேர வேலை நேரம் என்ற பேச்சு இருந்தாலும், ஒரு போதும் அந்த நேரத்துக்குள் வேலை முடியும் என எந்த உறுதியும் இல்லை என்றும், ஆனால் எல்லாத்தும் ஒரு தொடக்கம் வேண்டும். அந்த தொடக்கமாக இதனை நாம் பார்க்க வேண்டும் என்று கல்யாணி பிரியதர்சன் தெரிவித்துள்ளார்.