“யார் இந்த மஹிகா சர்மா?” ஹர்திக் பாண்டியாவின் புதிய காதல்…. கௌதம் கம்பீரிடம் அறிமுகம் வைரலாகும் வீடியோ….!!
SeithiSolai Tamil March 08, 2026 10:48 AM

2026 டி20 உலகக்கோப்பையின் அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கிய ஹர்திக் பாண்டியா, இப்போது தனது தனிப்பட்ட வாழ்க்கையாலும் இணையத்தில் வைரலாகி வருகிறார். வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) அகமதாபாத்தில் நடக்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான மெகா பைனலில் பங்கேற்க இந்திய அணி அங்கு வந்துள்ளது. அப்போது, ஹர்திக் பாண்டியா தனது காதலி மஹிகா சர்மாவை, தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரிடம் அறிமுகப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

இந்த வீடியோவில், கம்பீர் மிகவும் அமைதியாகவும் புன்னகையுடனும் மஹிகாவை வரவேற்கிறார். மஹிகா சர்மா இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும் ஹர்திக்குடன் பயணிப்பதோடு, அரையிறுதி போட்டியின் போது ஹர்திக்கின் மகன் அகஸ்தியாவுடன் அமர்ந்து உற்சாகப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. 2024-ல் நடாஷா ஸ்டான்கோவிச்சை பிரிந்த பிறகு, ஹர்திக் தனது புதிய காதலியுடன் பொதுவெளியில் தோன்றுவது இதுவே முதல்முறை என்பதால் ரசிகர்கள் மத்தியில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.