டைவேர்ஸ் பண்ணிட்டு நீங்க யார் கூட வேணா போங்க!... தவெக நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் பேட்டி!..
WEBDUNIA TAMIL March 09, 2026 05:48 PM


நடிகரும் தவெக தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா சமீபத்தில் விஜயிடம் இருந்து விவாகரத்துக் கேட்டு நீதிமன்றத்தை அணுகினார்.. மேலும் விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பிருப்பதாகவும் கூறி பரப்பரப்பு ஏற்படுத்தினார்.. இது நடந்து சில நாட்களிலேயே விஜய் நடிகை திரிஷாவுடன் ஒரு திருமண விழாவில் ஜோடியாக கலந்து கொண்டார்.. இது விஜய்க்கு ஆதரித்த பலருக்குமே அதிர்ச்சியை கொடுத்தது..

இதுவரை விஜய்க்கு ஆதரவு கொடுத்து வந்த பலருமே இந்த விஷயத்தில் விஜயை திட்ட துவங்கினார்கள். குறிப்பாக தவெக பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.அவர் வெளியிட்ட அறிக்கையில் ‘இது ஒர்த்தில்லை’ என மேடையில் பேசினீர்கள்.. எது ஒர்த் இல்லை.. உங்கள் திருமண வாழ்க்கையா? அல்லது உங்கள் மனைவியா?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்..

இந்நிலையில், இன்று செய்தி அவர்களிடம் பேசிய ரஞ்சனா நாச்சியார் ‘தற்போது சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது.. பல பிரபலங்களும் விவாகரத்து செய்து கொள்கிறார்கள்.. கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவது ஒன்றும் பிரச்சனை இல்லை.. அது நல்லதுதான். அதை பற்றி யாரும் கேள்வி கேட்க முடியாது . அதேபோல் விவாகரத்து செய்த ஒருவர் இன்னொரு பெண்ணை திருமணம் கொள்வதையும் யாரும் கேள்வி கேட்க முடியாது.. அதுவும் இப்போது நிறைய நடக்கிறது..

ஆனால் தவெக தலைவர் விஜய் விவகாரத்து செய்யாமலேயே திரிஷாவோடு வந்தது எனக்கு பிடிக்கவில்லை.. அதுவும் அவரின் மனைவி விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். தங்குவதற்கு வீடில்லை என்று சொல்யிருக்கிறார்.. அவரின் மகனும் மகளும் சென்னையில் வெவ்வேறு இடங்களில் தங்கியிருக்கிறார்கள்.. விவாகரத்து மனுவில் கூட சங்கீதா அந்த நடிகையின் பெயரை குறிப்பிடாமல் கண்ணியம் கத்தார். அதேபோல் விஜயை திரிஷாவோடு இணைத்து பேசிய நயினார் நாகேந்திரன் கூட கண்ணியத்துடன் வருத்தம் தெரிவித்தார்..

ஆனால் ஒரு கட்சியின் தலைவராக இருக்கும் விஜயிடம் எந்த கண்ணியமும் இல்லை.. இவ்வளவு பிரச்சனைகள் நடந்தும் அவர் திரிஷாவை கூட்டிக்கொண்டு திருமணத்திற்கு வந்ததை கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அவர் ஒன்றும் சின்ன பையன் இல்லை. கட்சியை துவங்கியது முதல் எல்லா விஷயத்திற்கும் நாங்கள் விஜய்க்கு முட்டு கொடுத்தோம்.. அவர் என்ன செய்தாலும் ‘அண்ணன் செய்தது சரிதான்’ என்று பலரும் முட்டுக் கொடுக்கிறார்கள்.. நானும் கூட நயினர் நாகேந்திரனை கண்டித்தேன்..

ஆனால் அவர் திரிஷாவோடு ஜோடி போட்டுக் கொண்டு வந்த விஷயத்தில் எனக்கு உடன்பாடில்லை.. அது எனக்கு பிடிக்கவில்லை.. அவரை முதல்வராக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள்.. அவரது ரசிகர்களும் தவெக தொண்டர்களும் அவருக்காக உழைத்து வருகிறார்கள். ஆனால், விஜய் இப்படி செய்துவிட்டார்’ என சொல்லியிருக்கிறார்.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.