சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் குறித்து நடிகர் பார்த்திபன் தெரிவித்த ஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பார்த்திபனின் பேச்சு தரம் தாழ்ந்ததாகவும், நாகரீகமற்ற முறையில் இருந்ததாகவும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ள திரிஷா, பார்த்திபனின் பேச்சு “அறிவு இல்லாத அநாகரீக பேச்சு” என நேரடியாகச் சாடியுள்ளார். ஒரு சக கலைஞரைப் பற்றி பொதுவெளியில் இத்தகைய கருத்துக்களைப் பதிவிடுவது முறையற்றது என திரிஷா தரப்பிலிருந்து காட்டமான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிஷாவின் இந்தத் துணிச்சலான கருத்துக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பார்த்திபன் தரப்பிலிருந்து இதற்கு என்ன விளக்கம் அளிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கலை மற்றும் திரைத்துறை சார்ந்த விவாதங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும், தனிப்பட்ட நபர் மீதான விமர்சனங்கள் எல்லை மீறக்கூடாது என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த மோதல் தற்போது இணையதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
View this post on Instagram
A post shared by Polimer News (@polimernews)
“>
இதனைதொடர்ந்து பார்த்திபன் தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க்கும் விதமாக ‘பெண்ணே இப்பிரபஞ்சத்தின் ஆகப்பெரும் ஆக்க சக்தி’ எனப் புகழ்ந்ததோடு, அநாகரீகமான இக்கருத்துக்களுக்காக வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை என நடிகர் பார்த்திபன் உருக்கமான ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சக கலைஞரின் தரம் தாழ்ந்த பேச்சால் ஒட்டுமொத்தத் திரையுலகும் தர்மசங்கடத்திற்கு உள்ளாகியிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பெண்ணியத்தின் மேன்மையை வலியுறுத்தி தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.