திமுகவில் பல வருடங்கள் பயணித்து வருபவர் துரைமுருகன். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே திமுகவில் பலமுறை எம்எல்ஏவாகவும் அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.. அமைச்சராக பல துறைகளில் பணியாற்றியுள்ளார். தற்போது திமுகவின் பொதுச்செயலாளராக இருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைபாடு காரணமாக அரசியலில் ஆக்டிவாக இல்லை. கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சமீபத்தில்தான் டிஸ்சர்ஜ் ஆனார்.
2026 சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை துரைமுருவனுக்கு சீட் கொடுக்க வேண்டாம் என திமுக நினைக்கிறதாம். கடந்த பல வருடங்களாகவே வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில்தான் துரைமுருகன் போட்டியிட்டு வந்தார். இந்த முறை நீங்கள் போட்டியிட வேண்டாம்.. விட்டுக் கொடுங்கள் என உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட சிலர் துரைமுருகனிடம் சொன்னதாக தெரிகிறது. ஆனால் அதை துரைமுருகன் ஏற்கவில்லை.. இந்த ஒரு முறை கடைசியாக சீட்டு கொடுங்கள்.. இதற்கு மேல் கேட்க மாட்டேன் என அவர் திமுக தலைமையிடம் கேட்டதாக சொல்லப்படுகிறது..
புரிந்து கொள்ளுங்கள்.. உங்களுக்கு சீட் கொடுக்க முடியாது.. ஆனால் நீங்கள் சொல்லும் ஒரு நபருக்கு சீட் கெடுக்கிறோம் என சொல்ல அவர் குடும்பத்திலிருந்தே சிலர் அந்த தொகுதியில் போட்டியிட விரும்பியிருக்கிறார்கள்.. ஆனால், அதற்கு அவர் குடும்பத்திலிருந்தே எதிர்ப்பு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
காட்பாடி தொகுதியில் எனக்கு சீட் கொடுக்கவில்லை என்றால் என் சமூக ஒட்டுக்கள் திமுகவுக்கு கிடைக்காது எனவும் துரைமுருகன் சொல்லி வருகிறாராம்.
ஒருபக்கம் வேலூர் காட்பாடி தொகுதியை தேமுதிக கேட்டு வருகிறது. அனேகமாக இந்த முறை தேமுதிகவுக்கு காட்பாடி தொகுதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..