'குழந்தைகள் அதிக நேரம் கைப்பேசி பார்ப்பதால் ஆபத்து'; திரைநேரம் குறித்த ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!
Seithipunal Tamil March 21, 2026 05:48 AM

குழந்தைகள் அதிகநேரம் செல்போனைப் பயன்படுத்துவதால், மூளை சார்ந்த பாதிப்புகள் மட்டுமின்றி உடல்சார்ந்த பிரச்னைகளும் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அதிக நேரம் கைப்பேசி பார்க்கும் குழந்தைகள் உணர்ச்சிவசப்படுவதோடு, புதிய வார்த்தைகளை மற்றவர்களிடம் பேசுவதிலும், புரிந்துகொள்வதிலும் பெரும் சிரமத்தை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

மொபைல், கணினி போன்ற டிஜிட்டல் சாதனங்களைப் பார்ப்பதில் செலவிடும் நேரம் திரைநேரம் எனப்படுகிறது. அதிகப்படியான திரைநேரம் குழந்தைகளின் தூக்கமின்மை மற்றும் தூக்கக் குறைபாடுகளுக்கான முக்கிய காரணியாக உள்ளது.

2025-ஆம் ஆண்டு 07 ஆயிரம் குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளின்படி கைப்பேசி திரையில் ஓடும் சிறுசிறு காணொளிகள், ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகளைப் போலவே சிறார்களின் மூளையின் செயல்திறனை மழுங்கடிக்கின்றன. இதனால் மூளையின் 'வெண் பொருள்' குறைகிறது என்றும் இது கற்றல் திறன், நினைவாற்றல் மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறனைப் பறித்து விடுகிறது. இதன் விளைவாக, குழந்தைகளுக்கு 'கவனக்குறைவு அதீதசெயல்பாடு கோளாறு' ஏற்பட வாய்ப்புகள் அதிக வாய்ப்புகள் உள்ளன.

குழந்தைகள் அதிகநேரம் செல்போனைப் பயன்படுத்துவதால், மூளை சார்ந்த பாதிப்புகள் மட்டுமின்றி உடல்சார்ந்த பிரச்னைகளும் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அதாவது, குழந்தைகள் அதிக நேரம் குனிந்து, செல்போனைப் பார்ப்பதால், அவர்களுக்கு கழுத்து மற்றும் முதுகெலும்பு சார்ந்த பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், குழந்தைகள் உறங்கும் முன் கைப்பேசியைத் தொடவே கூடாது என்றும், தேவையற்ற மற்றும் குழந்தைகளை அடிமையாக்கும் செயலிகளை நீக்கவேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றன. வீட்டுப்பாடங்களைச் செய்ய செயற்கை நுண்ணறிவு கருவிகளை அனுமதிக்காமல் குழந்தைகள் சிந்தித்துச் செயல்பட அனுமதிக்க வேண்டும். சிறார்கள் சிக்கல்களுக்குத் தாங்களாகவே தீர்வுகளைக் காணும்போதுதான் மூளை வலிமையாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.