கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் உள்ள தியாவரேகொப்பா வனவிலங்கு சரணாலயத்தில், பெங்களூருவைச் சேர்ந்த 27 வயது பயிற்சி கால்நடை மருத்துவர் சமீக்ஷா ரெட்டி கடந்த மூன்று மாதங்களாகப் பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு சுமார் 11:30 மணியளவில் அவர் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, அங்கிருந்த சினையாக இருந்த நீர்யானை ஒன்று அவரைத் தாக்கியது.
இதில் பலத்த காயமடைந்த சமீக்ஷா ரெட்டி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 6:30 மணியளவில் அவர் உயிரிழந்தார்.