2 மடங்கு வேகத்தில் உருகும் இமயமலை!.. மிகப்பெரிய இயற்கை பேரிடர் ஏற்பட வாய்ப்பு!...
Webdunia Tamil March 21, 2026 08:48 PM


இந்தியாவின் அடையாளங்களில் ஒன்று இமயமலை. இமயமலையில்தான் உலகிலேயே அதிகமான உயரம் கொண்ட எவரெஸ்ட் மலை சிகரம் இருக்கிறது.. இந்த எவரெஸ்ட் மலை சிகரத்தில் ஏறுவது பலரின் கனவாக இருக்கிறது.. அந்த முயற்சியில் பலரு இறந்து போயிருக்கிறார்கள்.

ஆனால் இப்போதும் பலரும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒ
பக்கம் இமயமலை என்பது ஒரு ஆன்மீக தளமாகவும் கருதப்படுகிறது. இமயமலையில் பல முனிவர்களும், துறவிகளும் வசித்து வருவதாக ஆன்மீகவாதிகள் நம்புகிறார்கள்..

ஒருபக்கம் கடந்த பல வருடங்களாகவே இமயமலை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, கடுமையான மழை, நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சுமார் 200 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் இமயமலை பனிப்பாறைகளின் உருகும் வேகம் இரண்டு மடங்காக அதிகரித்திருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். உலகம் வெப்பமயமாகி வருவதெ இதற்கு காரணம் எனவும், இதன் காரணமாக மிகப்பெரிய இயற்கை பேரிடர் ஏற்பட வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்..
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.