“எங்க நிம்மதியே போச்சு!”.. வாடகைதாரர் செய்த டார்ச்சர்… சென்னையில் ஒரு உரிமையாளரின் பகீர் குற்றச்சாட்டு..!!!!
SeithiSolai Tamil March 21, 2026 09:48 PM

சென்னையில் ஒரு வீட்டு உரிமையாளர், தனது வீட்டை வாடகைக்கு எடுத்த நபர் வாடகை தராமலும், வீட்டை காலி செய்ய மறுத்தும் அடம் பிடிப்பதால் தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மிகவும் படித்தவர் மற்றும் கண்ணியமானவர் என நம்பி வீட்டை வாடகைக்கு விட்ட நிலையில், கடந்த 9 மாதங்களில் 6 மாதங்களுக்கு மேலாக வாடகையை அவர் தரவில்லை என ரெடிட் (Reddit) தளத்தில் அந்த உரிமையாளர் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில், அந்த வீட்டில் இருந்த விலை உயர்ந்த அலமாரிகள் மற்றும் குளியலறை சாதனங்கள் உடைக்கப்பட்டு, பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும், பல மாதங்களாக மின்சாரக் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் நிலையில் உள்ளது.

“வாடகை வருமானத்தை நம்பித்தான் வீட்டின் கடன் தவணையை (EMI) கட்டி வருகிறேன்; தற்போது டெனன்ட் பதிலளிக்காமல் இழுத்தடிப்பதால் என்ன செய்வது என்று தெரியவில்லை” என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

முன்பணமாகப் பெற்ற தொகை, இந்தச் சேதங்கள் மற்றும் நிலுவையில் உள்ள வாடகை பாக்கிக்குக் கால் பங்கு கூட வராது என்பதால், சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.