மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் செயலி, உலகளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியத் தொடர்பு சாதனமாக உள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 50 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியைப் பயன்படுத்தி வரும் நிலையில், பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த நிறுவனம் தொடர்ந்து புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.
குறிப்பாக, வாட்ஸ்அப் மூலம் ஆடியோ மற்றும் வீடியோ கால்கள் பேசும்போது பின்னணியில் கேட்கும் இரைச்சல்கள் பெரும் இடையூறாக இருந்து வந்தன. இந்தத் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தற்போது வாட்ஸ்அப் ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளது.விரைவில் வரவிருக்கும் இந்த ‘நாய்ஸ் கேன்சலேஷன்’ தொழில்நுட்பம், அழைப்புகளின் தரத்தை பல மடங்கு உயர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பயனர்கள் பேருந்து நிலையம், கடைவீதி போன்ற நெரிசலான பொது இடங்களில் இருந்து பேசினாலும், சுற்றியுள்ள தேவையற்ற சத்தங்கள் தவிர்க்கப்பட்டு, பேசும் குரல் மட்டும் மிகவும் தெளிவாகக் கேட்கும்.
தகவல் தொடர்பு அனுபவத்தை இன்னும் எளிமையாகவும் துல்லியமாகவும் மாற்றும் நோக்கில் கொண்டுவரப்படும் இந்த அப்டேட், வாட்ஸ்அப் பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.