தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது முதற்கட்டத் தேர்தல் பிரசாரப் பயணத் திட்டத்தை அறிவித்துள்ளார். 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் அவர், மார்ச் 23 முதல் தனது தீவிரப் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
பிரசாரப் பயண விவரங்கள்:
மார்ச் 23: திருத்தணி முருகன் கோவிலில் வழிபாடு செய்து பிரசாரத்தைத் தொடங்குகிறார். அன்று மாலை சோளிங்கர் மற்றும் ராணிப்பேட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.
மார்ச் 24: வேலூர், குடியாத்தம், ஆம்பூர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து, இரவு திருப்பத்தூர் மற்றும் ஊத்தங்கரையில் பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார்.
மார்ச் 25: கிருஷ்ணகிரி, சூளகிரி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி வழியாகச் சென்று பென்னாகரத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
மார்ச் 26: மேட்டூர், ஓமலூர், சேலம், வாழப்பாடி மற்றும் ஆத்தூரில் பிரசாரம் செய்து, இரவு கள்ளக்குறிச்சியில் பேசுகிறார்.
மார்ச் 27: சங்கராபுரம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை மற்றும் சேத்துப்பட்டில் வாக்குச் சேகரித்து, வந்தவாசியில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
மார்ச் 28: காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து, மாலை திருவள்ளூர் மற்றும் இரவு ஆவடியில் நடைபெறும் கூட்டங்களுடன் முதற்கட்டப் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
ஏற்கனவே 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும், தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுள்ள நிலையில், சீமானின் இந்தப் பிரசாரப் பயணம் அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.