புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு!.. தமிழ்நாடு எப்போது?..
WEBDUNIA TAMIL March 21, 2026 11:48 PM


நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருப்பவர் விஜய். இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கினார். மேலும் ஜனநாயகன் எனது கடைசி படம் எனவும் அறிவித்தார். அதோடு அரசியலுக்கு வந்த சில நடிகர்கள் மீண்டும் சினிமாக்கு சென்று விடுவார்கள்.. ஆனால் நான் அப்படி இல்லை.. அரசியல்தான் என் எதிர்காலம் எனவும் பேசினார்..

குறிப்பாக ஆளும் கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார் விஜய். ஒருபக்கம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தற்போது வரை தவெக எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை. அதேபோல் தமிழகத்தில் தவெக எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பதிலும் குழப்பம் நீடித்து வருகிறது. ஏனெனில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை தவெக நிறுத்துமா என்பது தெரியவில்லை. ஏனெனில் ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தலுக்கு செலவு செய்ய நிர்வாகிகள் தயாராக இருக்கிறார்களா என்பது தெரியவில்லை.

இந்நிலையில்தான், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான தவெக வேட்பாளர் பட்டியலை நாளை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிடவிருக்கிறார். ஏனெனில், நாளை மறுநாள் அங்கு வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது.. எனவே, வேட்புமனு பட்டியலை இறுதி செய்யும் பணியில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் தவெக நிர்வாகிகள் தீவிரம் காட்டு வருவதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தை போல புதுச்சேரியிலும் தவெக தனித்துப் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.