உங்க ஏரியா கவுன்சிலர் சம்பளம் எவ்வுளவு தெரியுமா? இந்த உண்மை தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க.!
Tamilspark Tamil March 21, 2026 09:48 PM

நீங்கள் வசித்து வரும் பகுதியில் கவுன்சிலர் பொறுப்பில் இருக்கும் நபரின் மாத ஊதியம் இதுதான்.

கவுன்சிலர்:

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட, கவுன்சிலர்கள் மக்களுடன் நேரடி தொடர்பில் இருந்து செயல்படுகின்றனர். மக்களால் தேர்வு செய்யப்படும் கவுன்சிலர்களுக்கு கடந்த 2023ம் ஆண்டுக்கு முன்பு வரை சம்பளம் என்பது கிடையாது என்ற நிலை இருந்தது. வார்டின் வளர்ச்சிக்காக நீங்கள் தேர்வு செய்த கவுன்சிலரை பலரும் அணுகி இருப்பார்கள். இவர்களுக்கான மாத ஊதியம் என்பது 2023ம் ஆண்டில் தொங்கியது.

இதையும் படிங்க: ஷாக்.. 2026ல் அசுர வேகத்தில் உயரும் தங்கம்.. நகை வாங்க இதுதான் சரியான நேரம்.. மிஸ் பண்ணிடாதீங்க.!

திட்டங்களை செயல்படுத்தும் நபர்:

நமது தெருவில் ஏற்படும் தெருவிளக்கு, குப்பை, பாதுகாப்பு, குடிநீர் உட்பட பல்வேறு வசதிகளுக்கும் கவுன்சிலரை அணுக வேண்டும். மக்களின் குறைதீர்ப்பு மட்டுமல்லாது, தலைமைக்கு கொண்டு செல்ல வேண்டிய விஷயங்களை எடுத்துரைக்கவும், எம்.பி., எம்.எல்.ஏக்களை விட அணுக எளிதானதாகவும் கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். இவர்கள் வார்டு மக்களுக்கு அறிமுகம் கொண்ட நபர்களாகவும், மக்களுடன் மக்களாக இருந்து அரசு திட்டங்களை செயல்படுத்தும் நபராகவும் இருப்பார்கள்.

தமிழ்நாட்டில் வேலை பார்த்து வரும் கவுன்சிலர்களுக்கு 2023 வரையில் மாத சம்பளம் என்பது இல்லை. மேயர்களுக்கும் இதே நிலை இருந்தது. மாதம் ஒருமுறை நடைபெறும் கவுன்சிலர் கூட்டத்துக்கு பங்கேற்க ரூ.800, மண்டல கூட்டத்தில் பங்கேற்க ரூ.50 என மாதத்துக்கு ரூ.850 மட்டுமே கிடைக்கும். கவுன்சிலர்களுக்கும் மாத சம்பளம் எம்.எல்.ஏ., எம்.பி., போல வழங்க வேண்டும் என கோரிக்கை இருந்தது.

சம்பள விபரம்:

2023ம் ஆண்டு தமிழ்நாடு அரசு கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், துணை தலைவர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று ஊதியம் வழங்க ஆணையிட்டது. அதன்படி, மாநகராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கு மாத சம்பளமாக ரூ.10000, நகராட்சி கவுன்சிலர்களுக்கு ரூ.5000, நகராட்சி தலைவர்களுக்கு மாதம் ரூ.15000, துணை தலைவர்களுக்கு ரூ.10000, பஞ்சாயத்து தலைவருக்கு ரூ.10000, துணை தலைவர்களுக்கு ரூ.5000 அறிவிக்கப்பட்டது. சொந்த செலவுகள் மட்டுமில்லாது வார்டு பணிக்காக செல்லும்போது, அதனை தாங்களே ஏற்றுக்கொள்ளும் நிலையில் கவுன்சிலர்கள் இருந்தனர். சம்பள அறிவிப்புக்குப்பின் அவர்களுக்கு நிலையான ஊதியம் வழங்கப்படுகிறது. இது அவர்களின் பணிக்காலம் வரை செல்லுபடியாகும்.

இதையும் படிங்க: மார்னிங் மகிழ்ச்சி செய்தி! மீண்டும் மீண்டும் வங்கி கணக்கில் 1000+ 2,500+ 5000.....முதல்வர் ஸ்டாலினின் சர்ப்ரைஸ் கிப்ட்!!!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.