தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மொபைல் வாடிக்கையாளர்களுக்கு அதிவேக இணையம் மற்றும் தடையற்ற சிக்னல் சேவையை வழங்குவதற்காக, அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் தனியார் நிறுவனமான விஐ (Vi – Vodafone Idea) ஆகிய இரண்டும் ஒரு மெகா கூட்டணியை அமைத்துள்ளன.
இந்த அதிரடி ஒப்பந்தத்தின்படி, இரு நிறுவனங்களும் தங்களது நெட்வொர்க் டவர்களைப் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளன. இதன் மூலம் பிஎஸ்என்எல் சிக்னல் கிடைக்காத இடங்களில் விஐ டவர்களையும், விஐ சிக்னல் பலவீனமாக உள்ள கிராமப்புறங்களில் பிஎஸ்என்எல் டவர்களையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைக்கவும், சிக்னல் கிடைக்காமல் அவதிப்படும் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கவும் இந்த மாஸ்டர் பிளான் போடப்பட்டுள்ளது.
இந்த அதிரடி மாற்றத்தால் இனி உட்புறப் பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் கூட செல்போன் சிக்னல் ‘புல்’லாகக் கிடைக்கும் என்பதால் பிஎஸ்என்எல் மற்றும் விஐ வாடிக்கையாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.