துரந்தர் 2-வால் பாகிஸ்தானில் பீதி!.. தெருதெருவாக உளவாளிகளை தேடும் போலீஸ்!...
WEBDUNIA TAMIL March 24, 2026 04:48 PM


பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தோர் இயக்கத்தில் ரன்வீர் சிங் ஹீரோவாக நடித்து ஏற்கனவே வெளியான துரந்தர் திரைப்படம் 1350 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்ததால் இரண்டாம் பாகத்தை உருவாக்கினார்கள். துரந்தர் தி ரிவெஞ்ச் என்கிற பெயரில் உருவான இந்த திரைப்படம் கடந்த 19ம் தேதி உலகெங்கும் ரிலீஸ் ஆனது..

இந்த படத்தில் மாதவன், அக்ஷய் கண்ணா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்திய உளவாளியான ரன்வீர் சிங் பாகிஸ்தானில் பிச்சைக்காரன் போல் நடித்து இந்திய ராணுவத்திற்கு சேவை செல்வது போல படத்தில் காட்சிகள் வருகிறது.
பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராக தேசப்பற்று உணர்வை இந்த படம் பேசுவதால் வட மாநிலங்களில் வசிக்கும் மக்கள் இந்த படத்தை பெரிதும் விரும்புகிறார்கள்..

படம் வெளியாகி ஐந்து நாட்களில் இப்படம் 800 கோடி வரை வசூல் செய்து விட்டது.
ஒருபக்கம் இந்த படத்தால் பாகிஸ்தானில் சாலையோரங்களில் வசிக்கும் பிச்சைக்காரர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.

அங்குள்ள சில அமைப்புகளை சேர்ந்தவர்களும், காவல்துறை அதிகாரிகளும் தெருத்தெருவாக சென்று அங்கே படுத்து கிடக்கும் பிச்சைக்காரர்களை எழுப்பி அவர்களை பற்றி விசாரிப்பதும், அவர்களிடம் என்ன இருக்கிறது என்பதை சோதிப்பதும் தொடர்ந்து வருகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது..


View this post on Instagram

A post shared by The First Mail (@the_firstmail)