சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரீயூனியன் நிகழ்ச்சி நேற்று சென்னை சேப்பாக் மைதானத்தில் நடந்தது. இந்த விழாவில் கிரிக்கெட் வீரர் தோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக ஏ.ஆர்.ரகுமான், சிவகார்த்திகேயன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
அந்த மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் ‘தோனி சார் உங்களை டிவியில் பார்த்திருக்கிறேன்.. மைதானத்தில் பார்த்திருக்கிறேன்.. ஆனால் இப்போதுதான் உங்களை நேரில் அருகில் பார்க்கிறேன்.. எனக்கு நடுக்கமாக இருக்கிறது.. நான் உங்களைப் போல நான் கூலான நபர் இல்லை. உங்கள் தலைமை பண்பு எனக்கு மிகவும் பிடிக்கும்..
சிஎஸ்கே என்பது எமோஷன். நான் மைதானத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தூரம் ஈ.சி.ஆர் சாலையில் இருக்கிறேன். தோனி சார் பேட்டிங் செய்ய வரும்போது எழும் விசில் சத்தம் எனது வீட்டில் கேட்கும்’ என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் புளூசட்டமாறன் இந்த செய்தியை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து ‘அமரன் படம் ஓடினாலும் ஓடுச்சு.. அரசியல். இலக்கியம், ஆன்மீகம், வில்லுப்பாட்டு, விளையாட்டு.. என எங்க திரும்பினாலும் திடீர் தளபதி சலங்கை கட்டி ஆடுகிறார். 25 கிலோமீட்டர் அப்பு.. 25 கிலோமீட்டர்’ என்று அவரின் பாணியிலேயே அவரை கலாய்த்துள்ளார்.