ஈரான் நாட்டின் மீது எப்போது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் தொடுக்க துவங்கியதோ அப்போதே உலகமெங்கும் உள்ள மக்கள் பல பாதிப்புகளை சந்திக்க துவங்கி விட்டார்கள். குறிப்பாக இந்தியா உள்லிட்ட பல நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது.
கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டால் சமையல் சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நிறைய ஹோட்டல்களும் மூடப்பட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு உதவும் சவுதி அரேபியா, துபாய், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து ஈரான் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது..
ஒருபக்கம் எண்ணெய் கப்பல்கள் செல்லும் ஹோர்மூஸ் ஜலசந்தியையும் ஈரான் முடிவிட்டது. இதன் காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களிலும் கேஸ் தட்டுப்பாடு நிலவுகிறது.
ஒரு பக்கம் இந்த போர் காரணமாக இந்திய பங்கு சந்தை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஒரு மாதத்தில் 222 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. மேலும் போன வாரம் மட்டுமே பங்கு சந்தையில் 94 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில்தான், இன்று பங்கு சந்தையில் ஒரு மணி நேரத்தில் 12 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.. அதுவும் பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் இந்த சரிவு ஏற்பட்டிருக்கிறது..
போர் காரணமாக பதட்டத்தில் பலரும் பங்குகளை விற்பதால் அனைத்து துறை சார்ந்த நிறுவன பங்குகள் விலையிலும் கடும் சரிவு ஏற்பட்டிருக்கிறது..