அதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இன்று கூட்டணியை இறுதி செய்ய எல்லா கட்சித் தலைவர்களும் அஇஅதிமுக தலைமைக் கழகத்திற்கு வந்தார்கள்.
எல்லோரும் லிப்டில் ஏறி, மாடத்தின் வழியாகவே உள்ளே வந்தார்கள்.
பத்திரிகையாளர்களும், தொண்டர்களும் அழைக்கவே, கூட்டணி அருமையாக அமைந்துவிட்ட சந்தோஷத்தை கைகாட்டி, வணக்கம் வைத்து பகிர்ந்துகொண்டார்கள்.
ஆனா பாருங்க… இதுலயும் நம்ம திமுக சொம்பாக உள்ள சில ஊடகங்கள் வழக்கம் போல தங்கள் Convenience-க்கு (Conveyance-க்கும்?) கதை எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.
கடைசி வரைக்கும் இந்த பூச்சாண்டி கதையை சொல்லி தான் அரசியல் பண்ண போறீங்களா திமுக?
மக்களுக்கு எதாவது முன்ன பின்ன பண்ணியிருந்தா தானே அதை சொல்லி வாக்கு கேட்க முடியும்?
அதுக்கு வக்கில்லாம தான் “ஆக… டெல்லியிலே” ன்னு உருட்டிட்டு இருந்தீங்க… அது புஸ்ஸ்ஸுனு போனதும், அடுத்த உருட்டு வந்திருக்கு!
ஆமா… உங்க கூட்டணியில் ஏதோ வெட்டுகுத்து நடக்காத குறையா கூட்டணி விரிசல்னு எங்க அண்ணன் செல்லூர் ராஜு அவர்கள் சொல்லியும், பத்திரிகை ஊடக செய்திகளிலும் கேள்விப்பட்டோமே… போய் அதை பாருங்க முதல்ல" என்று தெரிவித்துள்ளது.