ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் கபூர் மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் துரந்தர். இந்த படத்தின் படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் ரூ. 1350 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. அத்துடன், நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலும் இந்த படம் வெளியிடப்பட்டு அதிக வியூஸ்களை குவித்துள்ளது.
துரந்தர் முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக 2 ஆம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தத்த்து. அதன்படி, கடந்த 19 ஆம் தேதி வியாழகிழமை துரந்தர்-2 உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
ரிவெங்ஜ் மோடிலில் வந்துள்ள இந்த படம் சுமார் 04 மணி நேரம் ஓடக் கூடியதாக உள்ளது. ஆனாலும், இந்த திரைப்படதின் விறுவிறுப்பான திரைக்கதை, அதிரடியான சண்டைக் காட்சி, அடுத்தடுத்த திருப்பங்கள் காரணமாக சினிமா ரசிகர்கள் எந்த இடத்திலும் சலிப்பாகாமல் பார்த்துள்ளனர். ஆனாலும் ஒரு சில கடுமையான மதவெறி ரீதியான படம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், துரந்தர்-2 படத்தை பார்வையிட்டுள்ள பல்வேறு சினிமா பிரபலங்களும் பாராட்டுகளை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் துரந்தர் 2 படம் பார்த்து விட்டு தனது மகிழ்ச்சியை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், '' துரந்தர் 2 என்ன மாதிரியான திரைப்படம் !! படத்தின் இயக்குனர் ஆதித்யா தார் டிக்கெட் வசூலின் தந்தை என நிரூபித்துள்ளார்.
படத்தின் ஹீரோ ரன்வீர் சிங் மற்றும் படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒவ்வொரு இந்தியனும் கட்டாயமாக பார்க்க வேண்டிய திரைப்படம் இது. ஜெய்ஹிந்த்.'' என்று தெரிவித்துள்ளார்.