துரந்தர் படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்...சங்கி என்று நேரடியாக திட்டிய லெனின் பாரதி
ராகேஷ் தாரா March 24, 2026 12:14 PM

இந்தியில் வெளியாகி வசூல் சாதனை படைத்து வரும் துரந்தர் 2 திரைப்படம் பாராட்டி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார். துரந்தர் ஒவ்வொரு இந்தியரும் பார்த்து பெருமைப்பட வேண்டிய படம் என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் ரஜினியை விமர்சித்து திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி பதிவிட்டுள்ளார். " இரவோடு இரவாக மக்களை அல்லல் படவைத்து எத்தனையோ இன்னல்களை தந்த நரேந்திர மோடியின் டீமானிடைசேஷன் எனும் முட்டாள்தனத்தை பாராட்டிய சங்கி ரஜினிகாந்த் அவர்கள் இந்தப்படத்தை பாரட்டுவது ஒன்றும் அதிசயமில்லை." என லெனின் பாரதி கூறியுள்ளார்

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.