அமேசான் டேட்டா சென்டர் மீது ட்ரோன் தாக்குதல்.. கிளவுட் சேவைகள் கடுமையாக பாதிப்பு..!
WEBDUNIA TAMIL March 24, 2026 07:48 PM

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமேசான் கிளவுட் தரவு மையங்கள் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

ஈரானின் பதிலடி தாக்குதலின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்த சம்பவத்தில், இரண்டு முக்கிய தரவு மையங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மின் தடை, கட்டமைப்பு சேதம் மற்றும் தீயணைப்பு நடவடிக்கைகளால் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு, கிளவுட் சேவைகள் கடுமையாக முடங்கியுள்ளன.

இந்த தடங்கலால் அபுதாபி கமர்ஷியல் வங்கி உள்ளிட்ட பல நிதி நிறுவனங்களின் ஆன்லைன் சேவைகள் மற்றும் மொபைல் செயலிகள் முடங்கியுள்ளன. ஒரு முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தின் தரவு மையம் போர் சூழலில் தாக்கப்படுவது இதுவே முதல்முறை என நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தற்காலிகமாக தரவுகளைப் பேக்கப் எடுக்கவும், சேவைகளை வேறு பிராந்தியங்களுக்கு மாற்றவும் அமேசான் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.