ஒரே நாளில் பறிபோன இரண்டு மாணவிகளின் உயிர்கள்... திமுக அரசுத்த முழு பொறுப்பு... அதிமுக கண்டனம்!
Seithipunal Tamil March 24, 2026 09:48 PM

அதிமுக விடுத்துள்ள கண்டன செய்தியில், "திருநெல்வேலியில் படுகொலை செய்யப்பட்ட பட்டியலின விவசாயியின் மரணத்திற்கு, 6 நாட்களாகியும் குற்றவாளிகளைக் கைது செய்யாத காவல்துறையின் மெத்தனப்போக்கால், நீதி கிடைக்காத விரக்தியில் அந்த விவசாயியின் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பள்ளி மாணவி, மன உளைச்சலால் தனது உயிரை மாய்த்துக்கொண்ட துயரச் சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இவை வெறும் தற்கொலைகளல்ல; அரசின் அலட்சியத்தால் நிகழ்ந்த படுகொலைகள்!

ஒரே நாளில் இரண்டு மாணவிகளின் உயிர்கள் பறிபோவதற்கு திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையே முழு முதற்காரணம். சட்டம்-ஒழுங்கைச் சீரழித்துவிட்டு, வெறும் விளம்பர அரசியலில் மட்டும் கவனம் செலுத்தும் இந்த விடியா அரசு, இரு மாணவிகளின் மரணத்திற்கும் தார்மீகப் பொறுப்பேற்றுப் பதில் சொல்லியே தீர வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.