Happy Raj Review : அபாஸ் கம்பேக்..நடிப்பில் மிரட்டு ஜார்ஜ் மரியம்..ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ் விமர்சனம்
ராகேஷ் தாரா March 24, 2026 11:44 PM

பியாண்ட் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஹேப்பி ராஜ். ஜிவி பிரகாஷ் , கெளரி ப்ரியா , அபாஸ் , ஜார்ஜ் மரியான் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள் . ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் இன்று படத்தின் சிறப்பு திரையிடல் நடைபெற்றது. த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்திற்கு பின் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள பக்கா ஃபேமிலி என்டர்டெயினர் படமாக ஹேப்பி ராஜ் படம் உருவாகியுள்ளதாக விமர்சகர்கள் இப்படத்தை பாராட்டி வருகிறார்கள்.

ஹேப்பி ராஜ் திரைப்பட விமர்சனம் 

தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தாலும் ஜிவி பிரகாஷ் ஹிட் கொடுத்து நீண்ட காலம் ஆகிறது. அந்த குறையை போக்கி வைக்கும் விதமாக ஹேப்பி ராஜ் படம்  இருக்கும் என படம் பார்த்த பலர் கூறி  வருகிறார்கள். முதல் பாதி இளைஞர்களை கவரும் விதமாக காமெடியாக சென்றாலும் இரண்டாம் பாதியில் குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் விதமாக இப்படம் அமைந்துள்ளது. 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.