விஜயகாந்த் மறைவுக்குப் பின் அவரின் மனைவி பிரேமலதா தேமுதிக பொதுச்செயலாளராக மாறினார். 2026 சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரை அதிமுக, திமுக இரண்டு கட்சிகளிடமும் கூட்டணி பேரம் பேசி வந்தார் பிரேமலதா. 20 சட்டசபை தொகுதிகள் கொடுக்க வேண்டும், ஒரு ராஜ்ய சபா சீட் கொடுக்க வேண்டும் என கேட்டார் பிரேமலதா. ஆனால் அவரின் கோரிக்கையை எடப்பாடி பழனிச்சாமி ஏற்கவில்லை.
சரி.. ஒரு ராஜ்ய சபா சீட் மற்றும் 10 தொகுதிகளாக கொடுங்கள் என கேட்டார் பிரேமலதா. அதற்கும் பழனிச்சாமி கை விரித்திவிட்டார். பழனிச்சாமி. எனவே, திமுகவுடன் பேசினார் பிரேமலதா
. திமுக ராஜ்ய சபா சீட் கொடுக்க ஒப்புக்கொண்டது. சட்டசபை தொகுதிகளை பேசிக்கொள்ளலாம் என சொன்னதும் திமுகவுடன் கூட்டணி அமைத்தார் பிரேமலதா. திமுக சொன்னபடி பிரேமலதாவின் சுதீஷுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை கொடுத்துவிட்டது..
மேலும் பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடித்துவிட்டு இன்று காலை தேமுதிகவுடன் தொகுதி தொடர்பான பேச்சுவார்த்தை துவங்கியது. இறுதியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான ஒப்பந்தத்தில் இருவரும் கையழுத்திட்டனர்.
திமுகவில் பல வருடங்களாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தை போன்ற கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளை கொடுத்த திமுக இரண்டு சதவீதத்திற்கும் கீழே வாக்கு வங்கி வைத்திருக்கும் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கியது திமுக கூட்டணி கட்சிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.