UPSC / TNPSC: கோயம்புத்தூரில் இலவசப் பயிற்சி முகாம்; சிறப்புரை ஆற்றும் சைலேந்திர பாபு; முழு விவரம்
Vikatan March 24, 2026 08:48 PM

'UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து கோயம்புத்தூரில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.

'நீங்களும் ஆகலாம் IAS' என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற ஏப்ரல் 5 ஆம் தேதி கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் உள்ள SITRA ஆடிட்டோரியத்தில் நடக்க இருக்கிறது. அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது.

இந்த நிகழ்வில் திரு. ஆதில் பெய்க் (சிவில் சர்வீஸஸ் தேர்வு பயிற்சியாளர் - King Makers IAS அகாடமி), King Makers IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு போட்டித் தேர்வுகள் குறித்த ஆலோசனைகளை வழங்க உள்ளார்கள்.

இதில் டாக்டர். சி. சைலேந்திர பாபு, (ஐபிஎஸ் (ஓய்வு) தமிழ்நாடு முன்னாள் டிஜிபி/ காவல்துறை தலைவர்) சிறப்புரை ஆற்றயிருக்கிறார்.

`IAS, IPS அதிகாரியின் கையெழுத்துக்கு ஒரு வாழ்வையே மாற்றும் சக்தி இருக்கிறது!' | நீங்களும் ஆகலாம் IAS சிறப்புரை ஆற்றும் சைலேந்திர பாபு

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 1962-ஆம் ஆண்டு பிறந்த டாக்டர் சி. சைலேந்திர பாபு, 1987-ஆம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் (IPS) அதிகாரியாகத் தனது பணியைத் தொடங்கினார்.

விவசாயத் துறையில் முதுகலைப் பட்டமும், குற்றவியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்ற இவர், தமிழகக் காவல்துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி அதன் உச்சபட்ச பதவியான காவல்துறை தலைமை இயக்குநராக (DGP) உயர்ந்து 2023-ல் ஓய்வு பெற்றார்.

சைலேந்திர பாபு

இவர் கடலோரப் பாதுகாப்பு, தீயணைப்புத் துறை மற்றும் இரயில்வே காவல்துறை எனப் பல பிரிவுகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர். குறிப்பாக, 'மக்களுக்கான காவல்துறை' என்ற பிம்பத்தை உருவாக்கியவர்.

அதிகாரியாக மட்டுமல்லாமல், ஒரு சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் இளைஞர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். தற்போதும் அந்தப் பணியைத் தொடர்ந்து வருகிறார். 'நீங்களும் ஓர் ஐ.பி.எஸ் ஆகலாம்' போன்ற பல புத்தகங்களின் மூலம் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்திருக்கிறார்.

UPSC-ல் சாதித்த தமிழ்ப் பெண் Rajeshwari Suve Inspiring Interview | Vikatan TV | IAS

60 வயதைக் கடந்தும் மாரத்தான் ஓட்டம், சைக்கிள் பயணம் மற்றும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் தகுதியைப் பேணுவதில் இளைஞர்களுக்கு ஒரு 'ரோல் மாடலாக' விளங்குகிறார். இவரது சீரிய பணிக்காகத் தமிழக அரசின் வீரதீரச் செயல் விருது மற்றும் குடியரசுத் தலைவரின் உயரிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

UPSC/TNPSC தேர்வு

ஆனந்த விகடன், King Makers IAS அகடாமி நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இதுபோன்ற இலவசப் பயிற்சி முகாமினைப் பல ஆண்டுகளாக நடத்தி வருவதன் மூலம் எண்ணற்ற போட்டித் தேர்வாளர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

இந்தப் பயிற்சி முகாமிற்கு முன்பதிவு செய்ய 044- 66802997 என்ற எண்ணிற்கு மிஸ்ட்கால் கொடுக்கவும். அப்படி இல்லையென்றால் இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் கீழ்க்கண்ட விண்ணப்பத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

IAS, IPS தவிர நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மத்திய அரசு பணிகள் என்னென்ன?
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.