சிலம்பரசனைத் தொடர்ந்து யூத் படக்குழுவைப் பாராட்டிய சூர்யா மற்றும் கார்த்தி
ராகேஷ் தாரா March 24, 2026 09:14 PM

கென் கருணாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள யூத் திரைப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. முன்னதாக இப்படத்தின் படக்குழுவை நடிகர் சிலம்பரசன் பாராட்டியதைத் தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி படக்குழுவினரை சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்கள் 

கென் இயக்கி நாயகனாக நடித்துள்ள யூத் திரைப்படம் கடந்த மார்ச் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது. இப்படம் நான்கு நாட்களில் உலகளவில் ரூ28 கோடி வரை வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் 5 நாட்களில் ரூ25 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாயகன் , இயக்குநர் என ஒரே படத்தில் அசத்தியுள்ள கென் பல திசைகளில் இருந்து பாராட்டுக்களைப் பெற்று வருகிறார். யூத் படத்தில் கென் நடிகர் சிலம்பரசனின் தீவிர ரசிகராக நடித்துள்ளார். இதனால் இப்படத்தை பார்த்த சிம்பு படக்குழுவை நேரில் சந்தித்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார். 

யூத் படக்குழுவை பாராட்டிய சூர்யா மற்றும் கார்த்தி 

யூத் படத்தின் படப்பிடிப்பை நடிகர் கார்த்தி துவங்கி வைத்தார். தற்போது படத்தை கார்த்தி மற்றும் சூர்யா இருவரும் பார்வையிட்டு படக்குழுவை நேரில் சந்தித்து தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்கள்

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.