திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களும் இன்று தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகம், தமிழ்நாட்டில் 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதேன முடிவு செய்யப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.