டிஜிபி அலுவலகத்தில் நேரில் புகார் கொடுத்த விஜய்
Top Tamil News March 27, 2026 12:48 AM

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி விஜய் டிஜிபி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் புகார் அளித்துள்ளார்.

அரசியல் விமர்சகர், அப்துல் கலாமின் முன்னாள் உதவியாளர் என்று கூறப்படும் பொன்ராஜ் பேசிய பேச்சு ஒன்று சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. அதாவது அவர் தவெக பெண் தொண்டர்களை விபச்சாரிகள் என்று தரக்குறைவாக விமர்சித்து பேட்டி அளித்தார். இதற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி விஜய் டிஜிபி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் புகார் அளித்துள்ளார். சட்டம், ஒழுங்கு ஏடிஜிபியை சந்தித்து புகார் மனுவை அளித்தார். மனுவில் ஆதரவாளர் பொன்ராஜ் தவெக பெண்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழக மகளிரை மிக மோசமாக பேசிவரும் பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஜய் கேட்டுக்கொண்டார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.