சமயபுரம் கோயில் மண்டப மேற்கூரை இடிந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
Top Tamil News March 29, 2026 12:48 PM

திருச்சி சமயபுரம் கோவிலில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் உறங்கிக் கொண்டிருந்த பக்தர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சக்தி தலங்களில் முதன்மையானதும் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தந்து இரவு தங்கி காலையில் சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்து செல்வது வழக்கம். அதன்படி சமயபுரம் வந்து தங்கி இருந்து காலையில் அம்மனை தரிசனம் செய்துவிட்டு  செல்வதற்காக வருகை தந்த பக்தர்கள் கோவில் சன்னதி வீதி  மண்டபத்தில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நதியா (32) மற்றும் அவரது உறவினர்கள் படுத்து உறங்கி உள்ளனர்.

உறங்கிக் கொண்டிருந்த மூன்று பெண் பக்தர்கள் மீது மண்டப  சீலிங் மேற்கூரை காங்கிரட் சுவர் மூன்று பெண் பக்தர் மீது விழுந்து பலத்த காயமடைந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே நதியா உயிரிழந்தார். உடனடியாக அருகில் இருந்த மற்ற பக்தர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த  சமயபுரம் போலீசார் நேரில் சென்று  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து சமயபுரம் போலீசார்    பேரிக்காடுகளை கொண்டு  சன்னதி வீதியை முற்றிலும் அடைத்தனர். இந்த சம்பவம் பக்தர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று நான்கு ஆண்டு கள் நிறைவடைந்தன அதற்குள் மேற்குறி இடிந்து விழுந்த சம்பவம் பக்தர்களிடமும் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.