“தூக்கத்தை மறந்த திருமாவளவன்” விடிய விடிய நடந்த விசிக நேர்காணல்…. அந்த 8 பேர் யாரு….? வெளியாகப்போகும் 'மாஸ்' லிஸ்ட்….!!
SeithiSolai Tamil March 29, 2026 12:48 PM

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 8 தொகுதிகளைப் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இப்போது தனது வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் படுவேகமாக இறங்கியுள்ளது. நேற்று (மார்ச் 28) இரவு 11 மணிக்குத் தொடங்கிய வேட்பாளர் நேர்காணல், இன்று அதிகாலை 2.30 மணி வரை நீடித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கட்சியின் தலைவர் திருமாவளவன், விருப்ப மனு அளித்தவர்களிடம் ஒவ்வொருவராக நேர்காணல் நடத்தி, தொகுதியின் வெற்றி வாய்ப்புகள் குறித்து விரிவாக ஆலோசித்துள்ளார். “தலைவர் இவ்வளவு ஆக்டிவா இருக்காரே… கண்டிப்பா இந்தத் தடவை ரிசல்ட் அதிரப்போகுது!” என விசிக தொண்டர்கள் உற்சாகத்தில் புகைப்படங்களை வைரல் செய்து வருகின்றனர்.

விசிக-வுக்கு இந்த முறை காட்டுமன்னார்கோவில் (தனி), செய்யூர் (தனி), அரக்கோணம் (தனி), திண்டிவனம், பண்ருட்டி, பெரம்பலூர் (தனி), ஆலூர் ஷா நவாஸ் போட்டியிடும் தொகுதி என 8 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் பண்ருட்டி மற்றும் திண்டிவனம் ஆகிய பொதுத் தொகுதிகளில் யாரை நிறுத்துவது என்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாகத் தெரிகிறது.

நேர்காணல் முடிந்த கையோடு, “அந்த 8 அதிர்ஷ்டசாலிகள் யாருன்னு தெரிய இன்னும் சில மணிநேரம் தான் பாக்கி!” என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதிகாலை வரை கண் விழித்து திருமாவளவன் நடத்திய இந்த ‘மேரத்தான்’ நேர்காணல், வரும் தேர்தலில் விசிக-வின் அசுர வேக வெற்றிக்கான அடித்தளமாகப் பார்க்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.