“டெல்லிக்கும், தமிழ்நாட்டுக்குமான தேர்தல்... பாஜகவையும், அதிமுகவையும் விரட்டியடிப்போம்”- உதயநிதி ஸ்டாலின்
Top Tamil News March 30, 2026 10:48 PM

காஞ்சிபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பேரறிஞர் அண்ணா வழியில் மாநில உரிமைகளை காத்திட தலைவர் ஸ்டாலின் தலைமையில் மக்களை சந்தித்து வெல்வோம் ஒன்றாக என குறிப்பேட்டில் பதிவு செய்து துனை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தை துவக்கி உள்ளார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துனை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “தமிழக மக்கள் மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை விரும்புகிறார்கள், மக்களை சந்திக்க என்றுமே திமுக பயந்ததில்லை. முதலமைச்சரே எங்களுக்கு ரோல் மாடலாக இருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது காஞ்சிபுரத்தில் இருந்து அண்ணாவை வணங்கி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினேன். நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இங்கிருந்து தான் பிரச்சாரத்தை துவங்கி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்கள் மற்றும் படித்த நபர்களுக்கு இம்முறை சட்டமன்றத் தேர்தலில் அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அது மகிழ்ச்சியாக இருப்பதால் அதற்கான ஆதரவை மக்கள் தெரிவிப்பார்கள். தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் நடக்கும் தேர்தல் இது. இந்த தேர்தலில் பாஜகவையும், அதிமுகவையும் விரட்டியடிப்போம்.

திமுக ஆட்சியில் முதல்வர் முதலில் போட்டி கையெழுத்து பெண்கள் உதவி தொகை, தேர்தல் காரணம் காட்டி மகளிர் உதவி தொகையை அதிமுக பா.ஜ.க நிறுத்த பார்த்தார்கள். ஆனால் அதையும் மீறி பெண்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க எந்த திட்டமும் இல்லை ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு என பெயர் இல்லை. இந்தியாவில் முரட்டு அடிமை எடபாடி பழனிசாமி மகளிர் 1000 ரூபாய் இருந்தது இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் பெருநகராச்சியாக இருந்தாக தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது.பல ஆண்டுகளாக குடமுழுக்கு செய்யாமல் இருந்த ஏகாம்பரநாதர் கோவில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. இது போல் பல திட்டங்களை காஞ்சிபுரம் தொகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.” என்றார்.

இந்நிகழ்வின்போது உத்திரமேரூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் சுந்தர் காஞ்சிபுரம் சட்டமன்ற வேட்பாளர் நித்யா சுகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், எம் பி செல்வம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வாகிகள் உடன் இருந்தனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.