நடிகர் விஜய் ஒரு புதிய அரசியல் சக்தியாக தமிழக அரசியலில் உருவாகியிருக்கிறார். அவர் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் முதல் நிலை வாக்காளர்கள், இளைஞர்கள், பெண்களின் வாக்குகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கிறது, இந்த கட்சி 234 தொகுதிகளிலும் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடுகிறது. விஜயை பொறுத்தவரை அவர் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்..
கட்சி துவங்கியதில் இருந்தே விஜய் திமுகவை மட்டுமே தொடர்ந்து விமர்சித்து பேசி வருகிறார். அவர் அதிமுகவே, பாஜகவையோ, நாம் தமிழர் சீமானையோ அவர் விமர்சனம் செய்வது இல்லை.. கேட்டால் ‘தற்போது நடப்பது சட்டமன்ற தேர்தல்.. ஆட்சியில் இருப்பது திமுக.. அவர்களைப் பற்றி மட்டும்தான் பேசுவோம்’ என்கிறார்..
இந்நிலையில், இன்று சென்னை வந்த பாஜக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் பேசிய போது ‘தமிழ்நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.. மறைந்த ஜெயலலிதாவின் ஆட்சியை மக்கள் மீண்டும் கொண்டு வர நினைக்கிறார்கள்.. இந்திய தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இருக்கிறது.. கண்டிப்பாக திமுகவை வீழ்த்துவோம் எங்களுக்கு பெண்கள் விவசாயிகளின் ஆட்சியாக அது அமையும்.
விஜய்க்கு தமிழ்நாட்டை மக்களை பற்றியும், தமிழ்நாடு அரசியல் பற்றியும் எதுவும் தெரியவில்லை.. அவர் ஒரு கனவுலகில் வாழ்ந்து வருகிறார்.. விஜய் குறிப்பிட்ட அளவிலான சதவீத வாக்குகளை மட்டுமே வாங்குவார்.. விஜயகாந்த் கமலஹாசன் கூட இரண்டு மூன்று தொகுதிகள் வெற்றி பெற்றார்கள்.. அந்த நிலைதான் விஜய்க்கும் ஏற்படும்’ என அவர் கூறியிருக்கிறார்..