ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…
CineReporters Tamil April 02, 2026 04:48 PM

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார் நியூயார்க்கில் வசித்து வருகிறார். பங்குச்சந்தை தொடர்பான நிறுவனத்தில் அவர் பணிபுரிந்து வருவதாக சொல்லப்படுகிறது. அவரின் புகைப்படத்தை யாரும் இதுவரை பார்த்ததில்லை. எந்த மீடியாவுக்கும் அவர் எந்த பேட்டியும் இதுவரை கொடுத்ததும் இல்லை..

அதேநேரம் அஜித்தின் தம்பி அனில் குமார் ஓரளவுக்கு ரசிகர்களிடம் பரிச்சயமானவர். எனில் அப்போது சில பேட்டிகள் கொடுக்கிறார். அஜித்தின் குடும்ப விழாக்களிலும் அவர் கலந்து கொள்கிறார்.. அதனால் அவரின் முகம் மட்டும் ரசிகர்களுக்கு பரிட்சயம். அஜித்தின் தம்பி அனில் குமார் jodi365.com என்கிற திருமண இணையதளத்தை நடத்தி வருகிறார். இதுபோக வேறு சில தொழில்களிலும் செய்து வருகிறார்..

இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய அனில் குமார் ‘நிறைய பேர் என்கிட்ட செல்ஃபி எடுக்க வராங்க.. அவர்களிடம் ‘என் பெயர் என்ன தெரியுமா?’ என்று கேட்பேன்.. இல்ல.. தெரியாது சார்னு சொல்லுவாங்க.. என் பேரு கூட தெரியல.. அப்புறம் எதுக்கு என் கூட போட்டோ எடுக்குறீங்க?.. சோஷியல் மீடியாவில் அஜித் தம்பின்னு போடுறாதுக்கான்னு கேட்பேன்.. அவங்களுக்கு நான் திமிரு புடிச்சவனா தெரியும்.. இருந்துட்டு போறேன்.. நான் ஒன்னும் திருடல.. கொள்ளை அடிக்கல. அசிங்கமா பேசல.. ஆமாய்யா நான் திமிரு புடிச்சவன்தான்.. என் வாழ்க்கையில் முன்னேற கடினமாக உழைச்சிருக்கேன்’ என்று பொங்கி இருக்கிறார் அஜித் தம்பி அனில் குமார்..

மேலும், என்னை பேட்டிக்கு அழைத்தால் என்னை பற்றி கேளுங்கள்.. என் அண்ணனை பற்றி கேட்காதீர்கள் என அவர் ஒரு பேட்டியில் கோபமகவும் சொல்லியிருந்தார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.