சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 2026 ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. 44 வயதை கடந்துள்ள தோனி கடந்த சில ஆண்டுகளாக முழு உடற்தகுதி சிக்கல்களை சந்தித்து வருவது இதற்குக் காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், 2026 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, தொடக்கப் போட்டிகளில் தோனி விளையாட முடியாது என்று CSK நிர்வாகம் அறிவித்தது. இதனால் ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியை தவறவிட்ட தோனி, ஏப்ரல் 3-ஆம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும், அதன்பின் ஆர்.சி.பி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளிலும் கலந்துகொள்ள முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் தொடர்ச்சியாக நான்கு போட்டிகளை தவறவிடும் தோனி, ஏப்ரல் 14-ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சீசன் தான் தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கக்கூடும் என்பதால், சேப்பாக்கம் மைதானத்தில் அவரை மீண்டும் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.