உதயநிதியின் சொத்து மதிப்பு ரூ.20.64 கோடி.. மனைவி கிருத்திகாவிடம் 1.6 கிலோ தங்கம் - 10 நிலுவை வழக்குகள்!
Dinamaalai April 03, 2026 10:48 AM

சேப்பாக்கம் தொகுதியில் மீண்டும் களம் காணும் உதயநிதி ஸ்டாலின், தனது சொத்து விபரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளார். இதில் அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ. 20.64 கோடி எனத் தெரிய வந்துள்ளது.

கை இருப்பு மற்றும் வங்கி சேமிப்பாக உதயநிதியிடம் ரூ. 50,000 மற்றும் அவரது மனைவி கிருத்திகாவிடம் ரூ. 75,000 ரொக்கமாக உள்ளது. சென்னை டி.டி.கே சாலை மற்றும் ஹபிபுல்லா சாலைகளில் உள்ள வங்கிக் கணக்குகளில் மொத்தம் ரூ. 33 லட்சம் இருப்பு உள்ளது. இதில் தேர்தல் செலவுக்காகத் தொடங்கப்பட்ட பிரத்யேகக் கணக்கும் அடங்கும்.

எல்.ஐ.சி மற்றும் கோட்டக் லைஃப் இன்சூரன்ஸ் உள்ளிட்டவற்றில் உதயநிதி ரூ. 13.61 லட்சமும், கிருத்திகா ரூ. 15.22 லட்சமும் முதலீடு செய்துள்ளனர். உதயநிதி 'ஸ்னோ ஹவுசிங்' நிறுவனத்திற்கு ரூ. 10 கோடியும், நடிகர் சங்க அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடியும் கடன் வழங்கியுள்ளார்.

உதயநிதியிடம் ரூ. 1 கோடி மதிப்புள்ள லேண்ட் ரோவர் டிபென்டர் (Defender) மற்றும் ரூ. 23 லட்சம் மதிப்புள்ள இன்னோவா கார் உள்ளது. கிருத்திகா பெயரில் வாகனங்கள் ஏதுமில்லை. ஆச்சரியப்படும் விதமாக உதயநிதி பெயரில் தங்கம் அல்லது வெள்ளி நகைகள் எதுவும் இல்லை. ஆனால், கிருத்திகாவிடம் ரூ. 1.87 கோடி மதிப்புள்ள 1600 கிராம் (1.6 கிலோ) பழைய தங்க நகைகள் உள்ளன.

விவரம்

உதயநிதி ஸ்டாலின்

கிருத்திகா உதயநிதி

அசையும் சொத்து

ரூ. 12.92 கோடி

ரூ. 13.25 கோடி

அசையா சொத்து

ரூ. 7.72 கோடி

ஏதுமில்லை

மொத்த மதிப்பு

ரூ. 20.64 கோடி

ரூ. 13.25 கோடி

உதயநிதிக்குத் திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தில் 10.47 ஏக்கர் நிலமும், ராயப்பேட்டை மற்றும் பள்ளிக்கரணையில் குடியிருப்புகளும் உள்ளன.

உதயநிதி ஸ்டாலின் மீது மொத்தம் 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் சனாதன விவகாரம் தொடர்பாகத் தொடுக்கப்பட்ட வழக்குகள் உட்பட உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு வழக்கு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.