அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்து பிறப்பித்த நிர்வாக உத்தரவை எதிர்த்து, இந்திய-அமெரிக்க வழக்கறிஞர் ஸ்மிதா கோஷ் உச்ச நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நடத்தி வருகிறார்.
அரசியல் சாசன பொறுப்புணர்வு மையத்தின் மூத்த வழக்கறிஞரான இவர், 14-வது அரசியலமைப்பு திருத்தம் வழங்கும் பாதுகாப்பை இந்த உத்தரவு மீறுவதாக வாதிடுகிறார்.
குடியேற்ற சட்ட நிபுணரான ஸ்மிதா, ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியவர். "பெற்றோரின் குடியேற்ற அந்தஸ்து எதுவாக இருந்தாலும், அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை உண்டு" என்பதே அரசியலமைப்பின் அடிப்படை என அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இதற்காக 1844-ஆம் ஆண்டு நியூயார்க் நீதிமன்ற தீர்ப்பை ஆதாரமாக முன்வைத்து, 14வது திருத்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே பிறப்புரிமை குடியுரிமை ஒரு சட்டப்பூர்வ கோட்பாடாக இருந்ததை அவர் நிரூபித்துள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த அதிரடி மாற்றமானது நீண்டகால அரசியலமைப்பு பாதுகாப்பை குலைக்கும் செயல் என ஸ்மிதா கோஷ் தனது வாதத்தில் கடுமையாக குறிப்பிட்டுள்ளார். இவரது கல்வி மற்றும் சட்ட பின்புலம் இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
Edited by Siva