இந்தியாவில் சொந்த வீடு என்பது பெரும்பாலானோருக்கு கனவாக இருந்து வருகிறது. காரணம் சொந்த வீடு என்பது கௌரவமாக பார்க்கப்படுகிறது. கடன் வாங்கியாவது வீடு வாங்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதனால் குறைந்த வருமானம், அதிக செலவுகள் மற்றும் சிக்கலான வரி விதிமுறைகள் காரணமாக அது எளிதில் சாத்தியமாகாமல் இருந்து வருகிறது. ஆனால், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள வருமான வரி சட்டம் 2025 இந்த நிலையை முற்றிலும் மாற்றும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
புதிய வரி முறையின் முக்கிய அம்சம் என்னவென்றால், பழைய வரி சலுகைகள் மற்றும் கழிவுகளை குறைத்து, நேரடியாக வரி விகிதங்களை குறைப்பதன் மூலம் மக்களின் கைக்கு வரும் வருமானம் அதிகமாகும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.. இதன் மூலம் மாத வருமானம் அதிகரிக்கும் என்பது, மாத தவணை செலுத்தும் திறன் உயரும். இதனால் வீடு வாங்க முடியும்.
குறிப்பாக ஜென் சி மற்றும் மில்லேனியல் தலைமுறையினருக்கு இந்த மாற்றம் பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. முன்னதாக வீடு வாங்குவது வரி சலுகைக்காக எடுக்கப்பட்ட முடிவாக இருந்தது. ஆனால் தற்போது கேஸ் ஃபுலோ கிடைப்பதால், உண்மையான தேவைக்காக வீடு வாங்கும் நிலை உயரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் புதிய வருமான வரி சட்டத்தின் படி ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்க வரம்பு உயர்த்தப்பட்டிருப்பது நடுத்தர வர்க்க மக்களுக்கு பெரிய நிவாரணமாக உள்ளது. இதனால் அவர்கள் சேமிப்பு உயரும். அவர்களால் அதிக அளவில் முதலீடும் செய்ய முடியும். மேலும் இது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பலன் கிடைக்கும். குறிப்பாக பான் கார்டு அடிப்படையிலான எளிய நடைமுறைகள் மூலம் வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள், இந்தியாவில் சொத்து முதலீடு செய்வது எளிதாகும் இதனால் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் இந்த புதிய வரி சட்டம் வீடு வாங்கும் செயல்முறையை எளிதாக்கி, சந்தையில் நம்பிக்கையை அதிகரிக்கும். குறிப்பாக இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களில் வீடு வாங்குவது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அரசு மேற்கொள்ளும் உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வணிக ரீதியான வளர்ச்சியும் ரியல் எஸ்டேட் துறைக்கு கூடுதல் நம்பிக்கையை அளிக்கும்.
மொத்தத்தில் புதிய வருமான வரி சட்டம் 2025 இளைஞர்கள் மற்றும் முதன்முறையாக வீடு வாங்குபவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதோடு, இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையை மேலும் வளர்ச்சியடைய செய்யும் என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.