திருப்போரூர் கந்தசாமி கோயிலில் வழிபாடு செய்தபின், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
திருப்போரூர் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலுவை ஆதரித்து பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசை “தாரகாசுரன்” என விமர்சித்த அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றஞ்சாட்டினார். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும், அதன் தொடக்கம் திருப்போரூரிலேயே அமையும் எனவும் தெரிவித்தார்.
தாரகாசுரனை வதம் செய்த மண் திருப்போரூர் என்றும், அதேபோல் திமுக அரசையும் வதம் செய்ய வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிராக 62,000 குற்றங்கள் பதிவாகியுள்ளதாகவும், தினமும் 35க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடைபெறுகின்றன என்றும் அன்புமணி கூறினார். மேலும் இந்த திமுக ஆட்சியால் தமிழ்நாடு வாழத்தகுதியற்ற ஒரு மண்ணாக மாறி வருகிறது என்றும் அவர் கூறினார்.