தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் காரை மறித்து தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். வழக்கமாக இது போன்ற நேரங்களில் அரசியல் தலைவர்கள் காரிலேயே அமர்ந்திருப்பார்கள் அல்லது சற்று எரிச்சல் அடைவார்கள்.
ஆனால், முதல்வர் ஸ்டாலின் அந்த நேரத்தையும் வீணாக்காமல், காரில் இருந்து இறங்கி அருகே இருந்த பொதுமக்களிடம் மிக இயல்பாகப் பேசி வாக்கு சேகரிக்கத் தொடங்கினார்.
தேர்தல் அதிகாரிகள் காரை அங்குலம் அங்குலமாகச் சோதித்துக் கொண்டிருந்த போது, முதல்வர் பொதுமக்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டும், அவர்களிடம் குறைகளைக் கேட்டுக்கொண்டும் உற்சாகமாக உரையாடினார்.
அதிகாரிகளின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததுடன், கிடைத்த கேப்பில் தனது அரசியல் பணியையும் திறம்படச் செய்த முதல்வரின் இந்தச் செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.