விமானத்தில் ஏர் ஹோஸ்டஸ் ஏன் இப்படி அமர்கிறார்கள் தெரியுமா?… உயிரைக் காக்கும் 'பிரேஸ் பொசிஷன்… இதோ அதிர்ச்சியூட்டும் காரணம்…?
SeithiSolai Tamil April 04, 2026 06:48 AM

விமானம் டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் ஆகும் போது, விமானப் பணிப்பெண்கள் தங்கள் கைகளைத் தொடைகளுக்கு அடியில் வைத்து அமர்ந்திருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இது ஏதோ ஒரு சாதாரண அமரும் முறை அல்ல, மாறாக இது அவசர கால பாதுகாப்பிற்காகப் பின்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் அமரும்போது, உடல் அசையாமல் நிலையாக இருப்பதோடு, எதிர்பாராத விதமாக ஏதேனும் அதிர்வுகள் அல்லது விபத்து ஏற்பட்டால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் எலும்பு முறிவுகளை இது பெருமளவு குறைக்கிறது.

மேலும் விமானப் பயணத்தில் டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் ஆகிய இரண்டு நிலைகளுமே மிகவும் சவாலானவை. அந்த இக்கட்டான தருணங்களில் ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால், விமானப் பணிப்பெண்கள் முதலில் தங்களைப் பாதுகாத்துக் கொண்டால் மட்டுமே பயணிகளுக்குப் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வழங்கி அவர்களைக் காப்பாற்ற முடியும்.

இதற்காகவே அவர்கள் தங்கள் உள்ளங்கைகளைத் தொடைகளுக்கு அடியில் வைத்து, முதுகை நேராக நிமிர்த்தி அமர்கிறார்கள். இந்த அறிவியல் பூர்வமான அமரும் முறை, அவர்களை விபத்துகளின் போது நிலைதடுமாறாமல் வைக்க உதவுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.