பெட்ரோல், டீசல் விலையில் அதிரடி மாற்றம்? அமெரிக்க அழுத்தத்திற்கு இந்தியா கொடுத்த மாஸ் பதிலடி.. கையில் எடுத்த புதிய ஆயுதம்.. என்ன நடக்கிறது?
SeithiSolai Tamil April 04, 2026 08:48 AM

உலகெங்கும் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில், இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதி வியூகத்தை அதிரடியாக மாற்றியுள்ளது. இதுவரை மலிவு விலை எண்ணெய்க்காக ரஷ்யாவை அதிகம் சார்ந்திருந்த இந்தியா, தற்போது ஆப்பிரிக்க நாடான அங்கோலாவிலிருந்து இறக்குமதியை பெருமளவு அதிகரித்துள்ளது.

மார்ச் 2026-ல் இந்தியாவின் மூன்றாவது பெரிய எண்ணெய் விநியோக நாடாக அங்கோலா உருவெடுத்துள்ளது. சமீபத்தில் அங்கோலாவிலிருந்து சுமார் 2 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் கொள்முதல் செய்துள்ளது.

பெட்ரோல், டீசல் உற்பத்திக்கு உகந்த இந்த வகை எண்ணெய், இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு பெரும் லாபகரமாக அமைந்துள்ளதால் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா ஒரே நாட்டை மட்டும் நம்பியிருக்காமல், தனது எரிசக்தி தேவையை உறுதிப்படுத்த பிரேசில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிடமிருந்தும் கொள்முதலைப் பன்முகப்படுத்தி வருகிறது.

1985 முதல் இந்தியா மற்றும் அங்கோலா இடையே வலுவான தூதரக உறவுகள் இருந்து வரும் நிலையில், தற்போது வர்த்தக ரீதியாகவும் இரு நாடுகளும் நெருக்கமடைந்துள்ளன. அங்கோலாவின் மூன்றாவது பெரிய வர்த்தகப் பங்காளியாக இந்தியா விளங்குவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் பல பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.

இதன் மூலம் சர்வதேச அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், நாட்டின் எரிபொருள் தேவையை தடையின்றி பூர்த்தி செய்ய இந்தியா உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.