லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள படம் லீடர். நேற்று ஏப்ரல் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. லீடர் திரைப்படம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்தது என்று பார்க்கலாம்
லெஜண்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் தொழிலதிபர் சரவணா . இவரது இரண்டாவது படமாக லீடர் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத், லால், பிரபாகரன், அமிர்த ஐயர், VTV கணேஷ், இயல், ஐஸ்வர்யா, மரியம் ஜார்ஜ், நிஷா, “ஆதித்யா” கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் வைபோதா இசையமைத்துள்ளார்.
சீக்ரெட் ஏஜெண்டான நாயகன் சக்திவேல் தனது மனைவியின் இறப்பிற்கு பின் தனது மகளுடன் நிம்மதியான வாழ்க்கை வாழுகிறார். தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெறும் தீவிரவாத கும்பலை பிடிக்க முயற்சிக்கும் காவல் அதிகாரியான ஆன்ட்ரியா நாயகன் சக்திவேலை இந்த பிரச்சனைக்குள் இழுத்துவிடுகிறார். சக்திவேலின் உண்மையான அடையாளம் என்ன ? அவரது மனைவி எப்படி இறந்தார் . கடைசியில் தனது மகளுடன் தனது நிம்மதியான வாழ்க்கைக்கு திரும்பினாரா என்பதே லீடர் படத்தின் கதை. ஏற்கனவே பல முறை பார்த்த டெம்பிளேட் தான் என்றாலும் முழுக்க முழுக்க ஆக்ஷன் அவதாரசத்தில் மாஸ் காட்டுகிறார் லெஜண்ட் சரவணன். ஜெயிலர் , லியோ போன்ற பெரிய ஸ்டார்களின் படங்களுக்கு நிகராக அதிரடி ஆக்ஷன் காட்சிகளோடு இப்படம் உருவாகியுள்ளது
லீடர் திரைப்படம் முதல் நாளில் ரூ1.5 கோடி வசூல் செய்துள்ளது. இப்படம் சுமார் ரூ50 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் இரண்டு வாரத்தில் லீடர் திரைப்படம் சிறப்பாக வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.