“மரியாதை கொடுங்க, இல்லன்னா நான் போறேன்”… பிசிசிஐ என்னை நடத்திய விதம் இதுதான்… பல ஆண்டுகளுக்குப் பிறகு குமுறிய உலகக்கோப்பை நாயகன்…!!!
SeithiSolai Tamil April 04, 2026 06:48 PM

இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான யுவராஜ் சிங், சமீபத்தில் ஒரு நேர்காணலில் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். 2011 உலகக்கோப்பை வெற்றியில் முக்கியப் பங்காற்றிய அவர், தனது ஓய்வு நேரத்தில் பிசிசிஐ மற்றும் அணி நிர்வாகத்திடம் இருந்து குறைந்தபட்ச மரியாதையை மட்டுமே எதிர்பார்த்ததாகக் கூறியுள்ளார்.

மேலும் “யாராவது என்னிடம் வந்து, ‘உங்களுக்கு வயதாகிவிட்டது, உங்கள் ஆட்டம் முன்னுரிமையில் இல்லை’ என்று நேரடியாகச் சொல்லியிருந்தால் நான் கௌரவமாக விலகியிருப்பேன், ஆனால் என்னை நடத்திய விதம் மிகவும் வேதனையளித்தது” என்று அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

இதனால் பல வருடங்களுக்குப் பிறகு அவர் வெளிப்படுத்தியுள்ள இந்தத் துயரம், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் போராட்டமான காலகட்டத்தில், தகுந்த மரியாதை கிடைக்காததால் விரக்தியடைந்த யுவராஜ், “எனக்குக் கொஞ்சம் மரியாதை கொடுங்கள், இல்லையென்றால் நான் இங்கிருந்து வெளியேறிவிடுகிறேன்” என்று ஒரு கட்டத்தில் ஆவேசமாகத் தோன்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் புற்றுநோயை வென்று மீண்டும் களமிறங்கி நாட்டிற்காகப் பல வெற்றிகளைப் பெற்றுத் தந்த ஒரு வீரருக்கு, முறையான வழியனுப்புதல் கிடைக்காதது இன்றும் ஒரு ஆறாத வடுவாகவே இருப்பதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.