அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு உள்ளாகியுள்ள ‘பிங் ஷுன்’ கப்பல் தொடர்பாக புதிய திருப்பம் ஒன்று உலக வர்த்தக வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது. ஈரானில் இருந்து சுமார் 6 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்ற இந்தக் கப்பல், இந்தியாவை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென தனது பாதையை மாற்றியுள்ளது.

இன்று குஜராத்தின் வாடினார் துறைமுகத்தை அடைய வேண்டியிருந்த இந்தக் கப்பல், தற்போது திசைமாற்றம் செய்து சீனாவின் டாங்யிங் துறைமுகத்தை நோக்கி செல்கிறது என கப்பல் கண்காணிப்பு தரவு நிறுவனம் கெப்ளர் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாற்றத்திற்குப் பின்னால் முக்கிய காரணமாக, ஈரான் எண்ணெய் விற்பனையாளர்கள் முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டும் என்ற புதிய நிபந்தனையை விதித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுவாக கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் 30 முதல் 60 நாட்கள் கழித்து பணம் செலுத்தும் நடைமுறை இருந்தாலும், இந்த முறை அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும், 2025ஆம் ஆண்டில் ‘பிங் ஷுன்’ கப்பலுக்கு அமெரிக்கா விதித்திருந்த பொருளாதார தடையும் இந்த நிலைமையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சுமார் ரூ.600 கோடி மதிப்புள்ள இந்த கச்சா எண்ணெய் சரக்கு, தற்போது சர்வதேச வர்த்தக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.