ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது என சொல்லி அந்நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி போரை துவங்கியது. இஸ்ரேல் தாக்கியதில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி தனது குடும்பத்தினருடன் கொல்லப்பட்டார். இஸ்ரேல் உளவுத்துறை சிசிடிவி கேமரா மூலம் கடந்த 10 வருடங்களாக கமேனியின் நடமாட்டைத்தை கண்கானித்து இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியது.
இதற்கு பழிவாங்கும் விதமாக ஈரான் இஸ்ரேல் மீதும் அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகள் மீதும் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. ஆனால், ஈரான் அழிந்துவிட்டது. ஈரானில் புதிய அரசு அமைந்துவிட்டது. இன்னும் 2 வாரங்களில் போர் நின்றுவிடும் என டொனால்ட் டிரம்ப் சொல்லிவருகிறார். ஆனால், ஈரானோ தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ விமானங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
சமீபத்தில் இகூட அமெரிக்காவின் A-10 WARTHOG ரக தாக்குதல் விமானத்தை ஈரானிய பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது. பாரசீக வளைகுடா பகுதியில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், விமானம் கடலில் விழுந்துவிட்டதாகவும் ஈரான் சொல்லியது.
அதேபோல், அமெரிக்காவின் F-15E ஒரு போர் விமானம் ஈரானிய ராணுவத்தால் வீழ்த்தப்பட்டது. இந்நிலையில்தான், ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் அமெரிக்க போர் விமானத்தின் விமானிகளை உயிருடன் பிடிக்க உதவினால் சன்மானம் கொடுக்கப்படும் என ஈரான் அறிவித்திருக்கிறது. விலைமதிப்புள்ள வெகுமதியும் பரிசும் சன்மானமாக கொடுக்கப்படும் என ஈரான் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருக்கிறது.