அப்பா இறந்தபின் தம்பி ராமையா எங்கள் வீட்டிற்கு வந்து சொன்ன வார்த்தை...எமோஷ்னலாக்கிய ரோபோ சங்கர் மகள்
ராகேஷ் தாரா April 04, 2026 07:14 PM

KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026” தங்க நட்சத்திரம். இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி திரை ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றதுஇந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், அரசியல் மாநாடு போல வடிவமைக்கப்பட்ட  பிரம்மாண்ட அரங்கில்,  கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரா தம்பி ராமையாவை பாராட்டி பேசினார். 

அப்பா மறைவுக்குப் பின் தம்பி ராமையா கொடுத்த ஆதரவு 

எல்லாருக்கும் என் மனமார்ந்த வணக்கம். இந்த மேடை எனக்கு ஒரு நன்றி சொல்லும் முக்கியமான தருணம். முதலில் தம்பி ராமையா பெரியப்பாவுக்கு என் மனமார்ந்த நன்றி. அவர் எங்கள் குடும்பத்துக்கு ஒரு பெரிய ஆதரவாக இருந்தவர். அப்பாவுக்கு அடுத்ததாக எனக்கு நம்பிக்கை கொடுத்தவர் அவர்தான்.

இது உன் வீடு, நீ எப்போதும் திரும்பி வரலாம்என்ற அவரது வார்த்தை எனக்கு தைரியம் தந்தது. உமா அண்ணா இயக்கும் படத்தில் நீ கண்டிப்பாக நடிக்கிற. திருப்பி நீ கொடுக்குற அடி எல்லாம் மரண அடியா இருக்கனும். பெரியப்பா உனக்கு எப்போதும் ஆதரவாக இருப்பேன் என்று சொன்னார். என் அப்பா இருந்தபிறகு எல்லாமே இருண்ட மாதிரி ஆகிடுச்சு. அப்போது தான் பெரியவங்க நாங்க எல்லாம் இருக்கோம் என்று எனக்கு நம்பிக்கை கொடுத்தார் . இந்த நம்பிக்கையால்தான் இன்று நான் இங்கே கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறேன். அடுத்து கண்ணன் ரவி சார் அவர்களுக்கு என் நன்றி. எங்களுக்கு மிகவும் தேவையான நேரத்தில் அவர் செய்த உதவி மறக்க முடியாதது. நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக ஆதரவு அளித்தார். அதற்காக எங்கள் குடும்பம் எப்போதும் நன்றியுடன் இருக்கும்.

என் உமா அண்ணாவுக்கு என் சிறப்பு நன்றி. எனக்கு உடன்பிறந்தவர்கள் இல்லையென்றாலும், அவர் எப்போதும் அண்ணனாக இருந்தார். எந்த நிலையிலும் என்னை கைவிடாமல், கையை பிடித்து இங்கே வரைக்கும் கொண்டு வந்தார். இன்று அவரை இயக்குநராக பார்க்கும் போது எனக்கு மிகுந்த பெருமை மற்றும் சந்தோஷம். இந்த மேடையில் இருக்கும் அனைத்து பெரிய கலைஞர்களுடனும் நிற்பது எனக்கு ஒரு பெருமை. அவர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். இந்த படம் கண்டிப்பாக ஒரு பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். எல்லாரும் தியேட்டரில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.