“அவர் ஒரு லெஜண்ட்!”… விஜய் அரசியலை விமர்சிப்பதாக எழுந்த புகார்… டீசர் சர்ச்சைக்கு இயக்குனர் கொடுத்த மாஸ் விளக்கம்..!!!!
SeithiSolai Tamil April 04, 2026 07:48 PM

நடிகர் நட்டி நட்ராஜ் நடிப்பில், தம்பி ராமையாவின் கதை-வசனத்தில், உமாபதி ராமையா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டி.என். 2026’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியது.

இந்தப் படத்தில் ஒரு முன்னணி நடிகரின் அரசியல் வருகையைக் கிண்டல் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகத் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

குறிப்பாக, விஜய்யின் அரசியல் லட்சியங்களை மறைமுகமாகத் தாக்குவது போல் டீசர் அமைந்துள்ளதாகக் கூறி படக்குழுவினரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவாதங்களுக்குப் பதிலளித்த இயக்குனர் உமாபதி ராமையா, “இந்தப் படம் எந்த ஒரு தனிநபருக்கும் எதிரானது அல்ல, யாரையும் அவமதிக்கும் நோக்கம் எங்களுக்குக் கிடையாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், “மக்கள் யாரைக் குறிப்பிடுகிறார்களோ (விஜய்), அவர் ஒரு ‘சிங்கம்’ போன்றவர்; சிங்கத்தை யாராவது அவமதிக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பிய அவர், இந்தப் படத்தை வெறும் திரைப்படமாக மட்டுமே பார்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

நட்டி நட்ராஜ், யாஷிகா ஆனந்த், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.