'அன்பே உயர்ந்த மதம்'…! ஈஸ்டர் தினத்தில் ஒற்றுமை, சமத்துவம் வலியுறுத்திய செல்வப்பெருந்தகை...!
Seithipunal Tamil April 04, 2026 08:48 PM

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள ஈஸ்டர் வாழ்த்தில் குறிப்பிட்டதாவது,"உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவ சமூகத்தினர், அன்பும் மனிதநேயமும் நிறைந்த சேவைகளின் மூலம் சமூகத்தில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளனர். முதியோர் இல்லங்கள், ஏழை மற்றும் எளிய மாணவர்களுக்கு இலவசக் கல்

இயேசு கிறிஸ்து மனிதகுலத்திற்கு வழங்கிய அன்பு, கருணை, தியாகம், சமத்துவம் மற்றும் சேவை என்ற உயரிய கொள்கைகள் எப்போதும் நம் வாழ்வை ஒளியூட்டும் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும்.

கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த அவர், மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து மனித குலத்திற்கு நம்பிக்கையின் புதிய ஒளியை பரப்பினார். அந்த உயிர்ப்பு செய்தி என்றும் நம் இதயங்களில் உறுதியான நம்பிக்கையை விதைக்கட்டும்.

இந்த புனிதமான ஈஸ்டர் திருநாள், துன்பத்தில் தவிக்கும் மக்களுக்கு ஆறுதலாகவும், வறுமையில் வாடுவோருக்கு புதிய நம்பிக்கையாகவும், இருளில் தவிக்கும் உள்ளங்களுக்கு வெளிச்சமாகவும் அமையட்டும். “அன்பே உயர்ந்தது” என்ற இயேசுவின் போதனை, நாம் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் நெறியாக நிலைக்க வேண்டும்.

இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடிப்படையில் காங்கிரஸ் கட்சி தன்னுடைய உறுதியை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை அளித்து, நாட்டில் சமாதானம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் நிலைத்திருக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

இந்த இனிய நாளில், உங்கள் குடும்பத்தினருக்கும், உங்களை நேசிப்போருக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பு பெருகட்டும்". தமிழ்நாட்டில் வாழும் அனைத்து கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கும் இதயம் கனிந்த ஈஸ்டர் நல்வாழ்த்துகளை அவர் தெரிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.